தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐஸ்வர்யராய் படம் ஆதாரம்: வெப் உலகம் வடநாட்டு நடிகைகளுக்கு இது ஒன்றும் புதுசல்ல. ஜீனத்அமன், ரேகா, ஷப்னாஆஸ்மி, நந்திதாதாஸ், மல்லிகாஷெராவத், மேக்னாநாயுடு என ஜாக்கெட் அணியாமலும் சிலசமயம் மேலாடையே இல்லாமலும் நடித்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜாக்கெட் போடாமல் படம் முழுக்க நடித்திருக்கிறார் என்பதுதான் கூடுதல் பரபரப்புக்குக் காரணம்.
பெங்காலியில் பாலி என்கிற படத்தில் ஒரு இளம் விதவைக் கேரக்டரில் படம் முழுக்க வெறும் வெள்ளைச் சேலை மட்டுமே கட்டி நடித்திருக்கிறார். வங்காளமொழி படங்கள் பெரும்பாலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப் படங்களாகவே இருக்கும். ஆபாசத்தையும் ஆபாசம் இல்லாமல் சித்தரித்துக் காட்டும். பிரபல வங்காளப் பட இயக்குநர் ரிதுபர்னகோஷ் இயக்கத்தில் `பாலி'யில் இளம் விதவையாக உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே ஐஸ்வர்யாராய் போட்ட முதல் கண்டிஷன் இந்தியில் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடக்கூடாது என்பதுதான். இந்தப் படம் வந்தால் தனது இமேஜ் பாலிவுட்டில் அடிபடும் என்பதாலோ என்னவோ இந்த கண்டிஷனைப் போட்டார் ஐஸ்வர்யா. அப்படி என்ன படத்தின் கதை? இளம் வயதில் கணவனை இழந்து விதவையாகி பின்பு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் தோழியின் கணவனோடேயே தொடர்பு வைத்துக் கொள்கிறார் ஐஸ்வர்யாராய். இப்படியொரு உணர்ச்சியமயமான கதை. சென்ஸாரில் பல காட்சிகளுக்கு வெட்டுக் கொடுத்தபோது, ரிபியூனரில் போராடி படத்தை கொண்டு வந்திருக்கிறார் ரிது. இந்தியில்தானே வெளியிடக்கூடாது. தமிழில் டப் செய்றோம் இப்ப என்ன செய்வீங்க என்கிறமாதிரி எம்.பி.எஸ். தியேட்டர் தமிழில் இந்தப் படத்தை கொண்டுவருகிறது. அந்த நிறுவனத்திடம் பேசினோம்... "இந்தப் படத்திற்கு நாங்கள் `ஐஸ்வர்யராய் ஒரு பேரழகி' என பேர் வைத்துள்ளோம். வெறும் கிளுகிளுப்பு மட்டும் இல்லாமல் உணர்ச்சிமயமாகவும், கண்கலங்குகிறபடியும் நடிப்பிலும் பின்னியெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் முழுக்க மேலாடையே இல்லாமல் நடித்திருக்கிறார். இதை தமிழ்ப்படுத்தும் நாங்கள் தமிழுக்காக பின்னணி இசை உட்பட சில நேட்டிவிட்டியான விஷயங்களை சேர்த்துள்ளோம். இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போலவே இருக்கும்.'' சென்னையில் மணிரத்னத்தின் `குரு' படப்பிடிப்பில் கலந்துகொண்டுவரும் ஐஸ்வர்யாராய்க்கும் இந்தப் பட விவகாரம் எட்டியிருக்கிறது. ஒருவேளை தமிழில் இந்தப் படத்தை வெளியிட ஐஸ்வர்யா கோர்ட்டுக்குப் போவாரோ என்னவோ? இளம் வயதில் கணவனை இழந்து விதவையாகி பின்பு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் தோழியின் கணவனோடேயே தொடர்பு வைத்துக் கொள்கிறார் ஐஸ்வர்யாராய். இப்படியொரு உணர்ச்சியமயமான கதை. சென்ஸாரில் பல காட்சிகளுக்கு வெட்டுக் கொடுத்தபோது, ரிபியூனரில் போராடி படத்தை கொண்டு வந்திருக்கிறார் ரிது. இந்தியில்தானே வெளியிடக்கூடாது. தமிழில் டப் செய்றோம் இப்ப என்ன செய்வீங்க என்கிறமாதிரி எம்.பி.எஸ். தியேட்டர் தமிழில் இந்தப் படத்தை கொண்டுவருகிறது. அந்த நிறுவனத்திடம் பேசினோம்... "இந்தப் படத்திற்கு நாங்கள் `ஐஸ்வர்யராய் ஒரு பேரழகி' என பேர் வைத்துள்ளோம். வெறும் கிளுகிளுப்பு மட்டும் இல்லாமல் உணர்ச்சிமயமாகவும், கண்கலங்குகிறபடியும் நடிப்பிலும் பின்னியெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் முழுக்க மேலாடையே இல்லாமல் நடித்திருக்கிறார். இதை தமிழ்ப்படுத்தும் நாங்கள் தமிழுக்காக பின்னணி இசை உட்பட சில நேட்டிவிட்டியான விஷயங்களை சேர்த்துள்ளோம். இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போலவே இருக்கும்.'' சென்னையில் மணிரத்னத்தின் `குரு' படப்பிடிப்பில் கலந்துகொண்டுவரும் ஐஸ்வர்யாராய்க்கும் இந்தப் பட விவகாரம் எட்டியிருக்கிறது. ஒருவேளை தமிழில் இந்தப் படத்தை வெளியிட ஐஸ்வர்யா கோர்ட்டுக்குப் போவாரோ என்னவோ?
ஆதாரம்: வெப் உலகம் |